Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜூலை 31-ஆம் தேதிக்குள் +2 மதிப்பெண்கள் வெளியிட வேண்டும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

0

'- Advertisement -

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக பள்ளி கல்வி நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில பாடத்திட்ட சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2 மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஜூலை இறுதிக்குள் ஆந்திராவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.