மாம்பழ மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்
ஓரளவு புளித்த மோர் – 500 மில்லி, மாம்பழம் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் – 4, வெந்தயம், அரிசி – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – ஒரு கிண்ணம்.

தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
மாம்பழத்தைச் சிறிது தண்ணீரில் வேகவைத்து தோல் கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப் பகுதியை மட்டும் எடுத்து மோர் விட்டு நன்கு மசித்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், வெந்தயம், அரிசி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து அவற்றை தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் மோருடன் மசித்த மாம்பழம், வறுத்து அரைத்த விழுது, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் கடுகு தாளிக்கவும். பின்னர் இதை மோர்க்கலவையில் சேர்க்கவும். பின்னர் மோர்க்கலவையை லேசாகச் சூடுபடுத்தி இறக்கவும். மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.