Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

180 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணி நேரத்திற்கு பின். உயிருடன் மீட்பு.

0

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் புறநகரான பதேகாபாத்தில் நேற்று காலை 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிவா என்ற 4 வயது சிறுவன் தவறி விழுந்தான்.

அந்த கிணறு, அவனுடைய தந்தையால் வெட்டப்பட்டது ஆகும்.

ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் விழந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீட்புப்பணி தொடங்கியது.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர், ராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

8 மணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் சிறுவன் சிவா உயிருடன் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

180 அடி ஆழ ஆள்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் 8 மணிநேர தீவிர முயற்சிக்கு பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.