Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.

0

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற மருந்துகள், மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், இதுதொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால், இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக மந்திரிகள் குழு ஒன்றை ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தது. அந்த மந்திரிகள் குழு, கடந்த 7-ந் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணைமந்திரி அனுராக் தாகூர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட மற்ற மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

மந்திரிகள் குழுவில் இடம்பெற்ற மாநில நிதி மந்திரிகள் பலர், வரி குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகள் மற்றும் பிற கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான வரி குறித்த பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் வரை நிவாரணம் வழங்கப்படும்.

தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியாக குறைப்பு , அதே நேரத்தில் ஆக்சிமீட்டர் 12 சதவீதம் முதல் 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். மேலும், ஆம்புலன்ஸ் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.