தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,651 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
463 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 33,646 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 2,68,968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 22,651 பேரில் ஆறு பேர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆந்திராவிலிருந்து வந்த நான்கு பேர், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த இருவரும் இதில் அடங்கும்.
தலைநகர் சென்னையில் 1,971பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 2,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12,513 ஆண்களும், 10,138 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.