பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க தமிழ்நாடு சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு CBSE தேர்வை கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து சில மாநில அரசுகளும் தங்கள் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.
“மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளோம். நாளை இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் உரிய முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார்
அவர்.
மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பலரது கருத்தையும் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது.