*திருச்சியில் தூர் வாரும் பணியை விரைந்து முடிக்க கூடுதல் தலைமை செயலர் உத்தரவு*.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நீர்நிலைகளில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளுவது குறித்து பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, திருச்சி, அரியலூர், கரூர் மாவட்ட
ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது தூர் வாரும் பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
பின்னர் சந்தீப் சக்சேனா திருச்சி புள்ளம்பாடியில் உள்ள பறவன் ஓடையை
தூர்வாரும் பணியையும், திருவெறும்பூர் குண்டூர் – நவல்பட்டு
அண்ணாநகரில் காட்டாறு ஆகிய ஆற்றின் தூர்வாரும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து சந்தீப் சக்சேனா கூறியதாவது,..
திருச்சி மண்டலத்திற்கு 589 பணிகள் மூலமாக 3859.44 கி.மீ தூரத்திற்கு தூர்வாருவதற்கு ரூ. 62.905 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் 78 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு நடைபெறுகிறது
என்று அவர் கூறினார். அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி நடுக்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்லம், செயற்பொறியாளர்கள் நீர்வள ஆதாரத்துறை பி.சரவணன், ஆசைத்தம்பி, உதவி செயற்பொறியாளர் ப.கண்ணன் மற்றும் உள்ளிட்டோர் இருந்தனர்.