ரு. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சுகாதார துறையினரிடம் வழங்கினார்.
திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுகாதாரதுறையினரிடம் வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகாதார நிலையங்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை, சானிடைசர், தெர்மா மீட்டர், ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுகாதாரத் துறையினரிடம் வழங்கினார்.
இந்த மருத்துவ உபகரணங்களை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் கணேஷ், இணை இயக்குனர் லட்சுமி, திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார், துவாக்குடி மருத்துவமனையை தலைமை அலுவலர் கோவிந்தநாதன் மற்றும்
தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.எஸ்.எம் கருணாநிதி, மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள்ஆகியோர் கலந்து கொண்டனர் கொண்டனர்
மருத்துவ உபகரணங்களை மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.