தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.
அதாவது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் தேர்வு நடத்தும் தேதிகள் வந்த பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.