தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை ஆகியோரின்
உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் மு. ஆனந்தன் அவர்கள் தலைமையில் இன்று 01.06.2021 திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஏழை எளிய பொது மக்கள் மற்றும் கண் பார்வையற்ற குடும்பகளுக்கு காவலர் உணவு ஊர்தி மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவி தளவாய்-3 பீர் முகமத், ஆய்வாளர் ஜெகதீஷ் மற்றும் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.