தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆங்கில மருத்துவத்தை பின்பற்றினாலும் சித்த மருத்துவமும் தற்போது ஒரு நோயைப் போக்கும் என்பதை தொடர்ந்து சித்த மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய்த் தடுப்பு பணியில் சித்தாவும் முக்கியத்துவம் பெற்று தற்போது திருச்சியில் உள்ள காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம், உள்ளிட்ட சில சித்த மருத்துவ மூலிகை பவுடர்கள் வழங்கப்படுவதோடு, நோயாளிகளுக்கு யோகா மற்றும் பழமையான விளையாட்டுகள் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகிறது.
அதோடு மூன்று வேளையும் நல்ல தரமான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
தற்போது கூடுதலாக சித்த மருத்துவத்தை நாடி வருபவர்களுக்கு அபிஷேகபுரம்கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ,
உதவி ஆணையர் வினோத், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன் ,இளங்கோ, மோகன்தாஸ் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்