தற்கொலை செய்து கொள் அல்லது என் மகளை ஆணவக்கொலை செய்வோம் என்றதால் காதலிக்காக தற்கொலை செய்துகொண்ட வாலிபர்
நீ தற்கொலை செய்துகொள், அல்லது என் மகளை ஆணவக்கொலை செய்துவிடுவோம்,,. மிரட்டிய பெற்றோர்..காதலிக்காக தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் – தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் -சேசுராணி தம்பதியினர்.
இவர்களுக்கு சிவா,விஜய் என்ற 2 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர்.இவரது மகன்கள் இருவருக்கும் திருமணமாகாத நிலையில் மகள் கீதாவிற்கு மட்டும் திருமணமாகி காரைக்குடி பகுதியில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது இளைய மகன் 27 வயதான விஜய் என்பவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இளநிலை பொறியியல் படிப்பு படித்து வந்தபோது, அதே கல்லூரியில் இவருடன் படித்து வந்த சக மாணவியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா மீனாவயல் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் அபர்ணா என்ற தேவிஅபர்ணாஸ்ரீ என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.
இஞ்சினியரிங் பட்டதாரியான விஜய் தனது படிப்பை முடித்துவிட்டு தற்சமயம் சென்னையில் உள்ள தனியார் கால் சென்டரில் வேலை செய்து கொண்டே முதுநிலைப் படிப்பைத் தொடர அதே கல்லூரியில் தொலைதூரக் கல்வி மூலம் படித்து வந்துள்ளார்.தற்சமயம் கொரோனா ஊரடங்கு காரணமாக பட்டதாரி வாலிபர் விஜய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது சொந்த ஊர்க்கு வந்துள்ளார். இந்நிலையில் வாலிபர் விஜய் கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமையன்று மதியம் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் அலைபேசி மூலம் விஜயின் பெற்றோரிடம் தொடர்புகொண்டு உங்களது மகன் காரைக்குடி அருகே மீனாவயல் பகுதியில் இறந்து கிடப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் இஞ்சினியரிங் வாலிபர் விஜயின் சகோதரி கீதா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது வாலிபர் விஜய் உடம்பில் தீ காயங்களுடன் தற்கொலை செய்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததார்
அதன் பின்னர் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் இறந்த விஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அங்கு உடலைப் பதப்படுத்தும் வசதி இல்லை எனக்கூறி இறந்த விஜய்யின் உடலை தேவகோட்டை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தேவகோட்டை தாலுகா அரசு மருத்துவமனை நிர்வாகம் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து விட்டதால் மீண்டும் காரைக்குடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு இறந்தவரின் உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.
நீண்ட அலைக்கழிப்புக்கு பின்னர் இறந்த விஜய்யின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்துள்ளனர்.
பின்னர் அவரது பெற்றோர் வீட்டில் உள்ள விஜய்யின் அறையில் இருந்த அவரது கணினி மற்றும் ஆவணங்களை தேடிப் பார்த்தபோது தற்கொலை செய்து கொண்ட விஜய் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கைப்பட எழுதிய மரண வாக்குமூல கடிதம் கிடைத்துள்ளது ,
அதில் தனது மகன் கல்லூரி படிக்கும்போது அபர்ணா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகவும் இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததாகவும்
அதனால் கடந்த மே 16-ம் தேதியன்று காதலியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து காதலியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர்.
அதன் பிறகு எங்களது மகளை நீ திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அவளை ஆணவப்படுகொலை செய்து விடுவோம் இல்லையென்றால் நீ தற்கொலை செய்து கொள் என்று மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியன்று காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் காவலர் எனது மகன் விஜய்யின் செல்போனில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணுக்கும் உனக்கும் எந்த சம்பந்தம் இல்லையெனவும், அந்தப் பெண்ணை தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் எழுதித் தருமாறு மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதியன்று ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பிய விஜய் காதலி அபர்ணாவின் வீட்டிற்கு சென்றவுடன் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜய் தனது உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்
.மேலும் அவரது சாவிற்கு அபர்ணாவின் தாய், தந்தை மற்றும் அவரது தங்கை ஆகிய மூவருமே காரணம் எனவும் மரண வாக்குமூல கடிதத்தில் எழுதியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் எனது மகன் விஜய்யை தற்கொலைக்கு தூண்டிய அவரது காதலியின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு விஜய்யின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.