Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் வினியோகம் செய்ய வேண்டும், முதல்வர் ஸ்டாலின்.

0

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும், நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும்,
நியாயமான விலையில் கிடைப்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* நகர்புறத்தை போன்று கிராமப்புறங்களிலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

* தமிழகத்தில் நேன்று ஒரே நாளில் 6,296 வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகளும், பழங்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

* உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.