மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர். இவர் தனது மகன் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன் பதிவு செய்து அந்த விமானத்தில் திருமணத்தை நடத்தினர்.
இந்நிலையில் மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்துறை இயக்குநகரம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
மேலும் திருமணம் நடந்த விமானத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனர் என கூறப்படுகிறது.