தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.
இன்று 20.05.2021 ( வியாழன் கிழமை ) முதல் 30.05.2021 ( ஞாயிற்றுக்கிழமை ) வரை மொத்த மீன் வியாபாரம் நடைபெறாது என நேற்று அறிவித்தனர். அதைபோல் மீன் மார்க்கெட் இன்று முதல் செயல்படவில்லை.
தற்போது இன்று வெங்காய மண்டி வியாபாரிகளும் பொதுமக்களின் நலனுக்காக வரும் 24ம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளனர்.
திருச்சியில் பொதுமக்களின் நலனுக்காக வியாபாரிகள் தாங்களே முன்வந்து கடைகளை மூட இருப்பது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.