Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சேலம் இரும்பாலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் தெடங்கி வைத்தார்.

0

 

சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுள்ள 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரைச் சந்தித்த ம மருத்துவர்கள் கொரோனா சூழலில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்தனர்.

கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களைச் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவரும் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா எனக் கேட்டறிந்தார்.

சேலம் உருக்காலையில் இருந்து சிகிச்சை மையத்துக்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.