புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனவிற்கான நிவாரண நிதி ரூ.2,000 ரூபாயாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணையாக ரூ2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததன் மூலம் 2,14,950 பயனாளர்கள் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.