Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கட்சி அலுவலகத்தில் அரசு அதிகாரிகள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு அறிக்கை.

0

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேற்று மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும், மாநகர காவல் ஆணையரும் நான் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக என் அலுவலகத்திற்கு வந்தனர்.

அந்த நேரத்தில் கொரோனா பேரிடரை சமாளிக்கும் பொருட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் பொது நல சங்கங்களான ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், யுகா அமைப்பு மற்றும் வாசுகி அறக்கட்டளை ஆகிய நிர்வாகிகளுடன் போதிய உதவிகளை தங்கள் அமைப்பின் சார்பாக மாவட்ட மக்களுக்கு செய்ய வேண்டுமென கோரிக்கையுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அரசு அதிகாரிகள் வருகை தந்தனர்.

கொரோனா காலத்தில் மக்கள் உயிரை காக்கின்ற வகையில் சேவை மனப்பான்மை உள்ள ஒற்றைக்கருதுள்ள நபர்கள் சந்திக்கும் ஆலோசனை கூட்டம் என்பதால் அதிகாரிகள் தாங்களும் இந்தக்கூட்டத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மற்றபடி இந்த கூட்டம் திட்டமிட்டு அதிகாரிகளை வரவழைத்து நடைபெற்ற கூட்டம் அல்ல அதை நடத்துவதற்கு நான் அறிந்தவகையில் அரசு ஊழியர் என்ற முறையில் என்னுடைய அலுவலகத்தில் நடத்த அனுமதியில்லை என்பதை நான் அறிந்தவன்.

சில பத்திரிககைளில் செய்தி வந்தவாறு முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,
மாவட்ட கழக பொறுப்பாளர்,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக.

Leave A Reply

Your email address will not be published.