கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்களில் சாலையோரம் வசித்து வரும் நாய்களுக்கு உணவு அளித்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்
கொரொனா பெருந்தொற்று பேரிடர் காலங்கள் ஏழை , எளிய பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி சாலையோரம் வசிக்கும் நாய்கள் உணவின்றி சுற்றித் திரிகின்றன.;
இந்நிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் ஏற்பாட்டில் உணவின்றி தவிக்கும் சுற்றித்திரியும் நாய்களுக்கு தினமும் பிஸ்கட் மற்றும் உணவினை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரம், புத்தூர் பகுதியில் வழங்கி வருகிறார்கள் இதனால் ஊரடங்கு காலங்களில் கடைகள் உணவகங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் கால்நடைகளும் நாய்களும் உணவின்றி இருந்த நிலையில் அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளையினர் உணவளித்து வருவது ஜீவராசிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளியில் கொரொனா பெருந்தொற்று காலங்களில் ஜீவராசிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்,
தொடர்புக்கு
யோகா ஆசிரியர் விஜயகுமார்
நிர்வாக அறங்காவலர்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
14, பிஷப் குளத்தெரு, புத்தூர்,திருச்சி-17. செல்- 98424 12247