நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.
அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” எனப் போற்றப்படுகிறது.
‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.
இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.
அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.
அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்குச் சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.
அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும்