தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது. உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
உலக தமிழர்களே உயிர் காக்க நிதி வழங்குங்கள். மக்கள் அளிக்கும் நிதி கொரோனா தடுப்பு பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
திடீர் அவசர செலவினங்களுக்காக தாராளமாக நிதியுதவி வழங்குங்தள்
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுங்கள். நிதியுதவி செய்பவர்களின் விவரங்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் வீடியோவில் கூறியுள்ளார்.
https://twitter.com/i/broadcasts/1OwGWVkNvPwKQ?t=9s&s=08