தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக் கு.பிச்சாண்டி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவை அமர்வில் சபாநாயகராக அப்பாவு மற்றும் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகிய இருவரும் பதவி ஏற்றனர்.
முன்னதாக தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டதை அறிவித்தார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அப்பாவுவை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். இதனையடுத்து துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி பெயர் அறிவிக்கப்பட்டு அவர் பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் சபாநாயகரை வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை நாட்கள் முழுமையாக நடைபெற ஒத்துழைப்போம் என்றார்.
இதையடுத்து சட்டப்பேரவை தலைவராக பதவியேற்ற அப்பாவுவிற்கு வாழ்த்து தெரிவித்து பேசிய அவர், பேரவைத் தலைவர் ஆசிரியரைப் போல் நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.