சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
தமிழகத்தின் மேல் 1.5 கி.மீ. உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.