காக்ரோச் கிரியேஷனின் புதிய படைப்பு காகித பூக்கள். வணிகர் சங்க மா.பொ.செ. கோவிந்தராஜுலு. வெளியிட்டார்.
திருச்சி:
கனவு தொழிற்சாலையை திருச்சியிலே மையம் கொள்ள வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனம்.
வளரும் கலைஞர்களின் பங்களிப்போடு கொரோனா கால பாதிப்பை மையப்படுத்தி, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை குறும் படமாக தயாரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பால், தொழில்கள் நொடித்து, பல குடும்ங்கள் தவித்து வருகின்றன. அது போன்ற நிலையில்
வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், விபரீத முடிவு எடுக்கும் நடுத்தர குடும்பத்தின் கதை தான் காகித பூக்கள் .
இதில், நடிகர்கள் ஆண்டனி தாமஸ், ஆனந்தி, ஹன்சிகா, பார்த்திபன்,ராம் சுரேஷ், ஹெப்சி, பாண்டி, தினேஷ், மணி, வேத் ஆகியோர் காதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்ட, ‘காகிதப் பூக்கள் ” என்ற இந்தப் படைப்பை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் முன்னிலையில்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி. கோவிந்தராஜுலு ரிலீஸ் செய்தார்.
கலையாலயா நிர்வாகி முனைவர் ஆர்.வி. மரகதம் முதல் சிடியை பெற்றுக் கொண்டார்.
காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெரியசாமி, இயக்குனர் ஆர்.பாஸ்கர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.