வேட்பாளர்கள்,முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்…! அப்ப தேர்தல் அதிகாரிகளுக்கு…?
சமிபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே-2ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு 72-மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் சமிபத்தில் தமிழகத்தின் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரவிட்டுள்ளது.
நியாயமான உத்தரவு தான் வேட்பாளருக்கோ, முகவருக்கோ கொரோனா தொற்று அறிகுறி இருந்து. அவை கண்டறியப்படாமல் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொண்ட பின்பு கண்டறியப்பட்டால் விளைவு மேசமாகிவிடும் என்பதற்கான இந்த உத்தரவு ஏற்புடையது தான் நியாயமானது தான்.
அதே போன்று வேட்பாளர் மற்றும் முகவர்களோடு வாக்கு எண்ணிக்கை மய்யத்தில் கலந்து கொள்ளும் அலுவலக உதவியாளர் முதல் ஐஏஎஸ் அதிகாரி வரை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அதிகாரிக்கும் இந்த கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாமல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலந்து கொண்ட பிறகு பின்னாளில் அவர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்படுமேயானால் பின் விளைவுகள் மோசமாகிவிடும்.
எனவே தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் உடனடியாக தமிழகம் முழுவதும் மே-2ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும்,வேட்பாளர், முகவர்களை போன்று கொரோனா பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்..
என மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் S.R.கிஷோர்குமார் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.