திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு முறைகளை பின்பற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு முறைகளை (Standard Operating Procedure ) பின்பற்றுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி ஆணையர் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணம் நடைபெறும் போது 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும், திருமணத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து நபர்களுக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல், அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், கிருமி நாசினி வழங்குதல் போன்றவற்றை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சுப நிகழ்ச்சிகளை வீட்டு மாடியில் நடத்த விரும்புவோர் மாநகராட்சியின் அனுமதி பெற்ற பின் அரசின் வழிகாட்டுதல்படி நடத்த வேண்டும் தெரிவித்தார்,