நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டாவின் திருமணம் முடிந்தது.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இன்று பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் திருமணம் முடிந்துள்ளது. இது விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது திருமணமாகும். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆகி 7 வருடங்கள் கழித்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர்.
அதையடுத்து படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் விஷ்ணு விஷால். இதற்கிடையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா விஷ்ணு விஷால் இருவரும் 2 வருடங்களுக்கும் மேல் காதலித்து வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் எளிமையாகவே இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
தற்போது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.