முதன்முறையாக புதுச்சேரியில் ஒரே நாளில் 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்
புதுச்சேரியில் வெள்ளிகிழமை இரவு முதல் வார இறுதி நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான
ஊரடங்கு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
திங்கட்கிழமைக்கு பிறகு கடைகள், நிறுவனங்கள், வர்த்தக மையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும், திருமணங்களை நூறு பேரைக் கொண்டு நடத்த வேண்டும்,
இறுதி ஊர்வலத்தில் 50 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுபாடுகளையும் அரசு விதித்துள்ளது.
மத வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும்
கோயில்கள் திறந்து வழக்கமான பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், உணவு கூடங்கள் 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் மதுபான கடைகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து மதுபான கடைகளும் மதுபானம் வழங்கும் பார்கள் மற்றும் ஓட்டல்கள் 26 ஆம் தேதி முதல் மதியம் 2 மணிக்குள் மூடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிகிழமை 23 ம் தேதி வார இறுதி ஊரடங்கு காரணமாக வெள்ளிகிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை மூடியிருக்க வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.