திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியில், நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் கிராமங்கள் தோறும் கபடி மைதானம் அமைத்து தருவேன்.
இளைஞர்கள் ஓய்வு நேரங் களில் கபடி விளையாடி தங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
மாநில, மாவட்ட அளவில் சிறந்த கபடி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதற்கு முயற்சி செய்வேன். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றார்.
வாக்கு சேகரிப்பின் போது ஒன்றிய செயலாளர் ராவணன் உள்பட அ.தி. மு.க. மற்றும் த.மா.கா., பா.ம.க. நிர்வாகிகள், கட்சிதொண்டர்கள் மற்றும் ஏராளமானவர்கள் உடன் சென்றனர்.