திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி தீவிர ஓட்டு வேட்டை.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் D.வீரசக்தி திருச்சி 22-வது வார்டுக்குட்பட்ட இருதயபுரம், மல்லிகைபுரம், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து டார்ச்லைட்
(மின்கல விளக்கு) சின்னத்தில் வாக்கு கேட்டார்.
வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் வீரசக்தியிடம் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் எங்கள் ஓட்டு டார்ச் லைட்டிற்கு தான் என கூறி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக முத்தரையர் சங்க மாநில தலைவர் ஆர்.வி. அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வீரசக்தி.
வேட்பாளருடன் மக்கள் நீதி மய்ய மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் ,நற்பணி மன்ற நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் சென்றனர்.