திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி தீவிர ஓட்டு வேட்டை.
திருச்சியில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பெரிய தெருக்களில் திறந்த வேன்களில் நின்று தங்களுக்கு ஆதரவு தரும்படி சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறுகிய தெருக்களில் மட்டும் நடந்து சென்று வாக்கு சேகரிக்கின்றனர்..
ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வீரசக்தி கிழக்கு தொகுதி முழுவதுமே வீதிவீதியாக வீடு வீடாக நடந்தே சென்று ஒவ்வொரு பொதுமக்களிடம் தனக்கு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்து வருகிறார்.
பல பகுதிகளில் இவர் எளிமையாக நடந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து தங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்.
டார்ச்லைட் சின்னத்தில் வாக்கு அளித்து உங்களை வெற்றி பெற வைப்போம் என உறுதி கூறி வருகின்றனர். இதனால் மேலும் உற்சாகமாக வீரசக்தி வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இவருடன் திருச்சி நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சுரேஷ், தொழில் முனைவோர் மன்ற செயலாளர் அய்யனார், நகர செயலாளர் சரவணன், நற்பணி மன்ற கே.ஜே.எஸ். குமார், செயலாளர், துணை செயலாளர் சதீஷ்குமார் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உடன் நடந்தே சென்று வருகின்றனர்.