Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்.

0

திருச்சி மண்ணச்சநல்லுார் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து சமயபுரம் நால்ரோடு மண்ணச்சநல்லுார் – எதுமலை பிரிவு சாலையில் நடிகையும் அதிமுக தலைமை கழக பேச்சாளருமான விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர். உயிர் பிரியும் வரை மக்களை நினைத்து அவர்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா மக்கள் வாழ்வில் முன்னேறுவதற்காக தீட்டப்பட்டது அதிமுக தேர்தல் அறிக்கை.

வெற்றி நடைபோடும் தமிழகத்தை வீறு நடை போடுவதற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

அதிமுக வேட்பாளர்
பரஞ்ஜோதியை நம்பினால் தன் உயிரையும் கொடுப்பார்.

அதிமுகவில்
பரஞ்ஜோதி கடின உழைப்பால் முன்னேறி வேட்பாளராக வந்துள்ளார்.

ஆனால் எதிரில் நிற்பவர்கள் கட்டு கட்டாக நோட்டுகள் கொடுத்து சீட் வாங்கி வந்துள்ளனர்.

திமுகவில் உழைத்த தொண்டர்கள் பலர் இருக்கையில் இன்று கட்சியில் சேர்ந்த நபரை பணத்திற்காக வேட்பாளர் ஆக்கியுள்ளனர்.
அவர் பணத்தால் அனைவரையும் விலைக்கு வாங்கி விடுவேன் என திமிராக கூறி வருகிறார்.

அவர் கல்லூரி உரிமையாளர்.. அவரை சாதாரணமாக சந்திக்கவே 5 செக்யூரிட்டி களை தாண்டி செல்ல வேண்டும்.

உங்கள் குறைகளை கூற அவரை நீங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்றால் ஐந்து வருடம் ஆகி விடும்.

பணத்தை நம்புகிறார்கள்
ஜெயிக்கமாட்டார்கள்.

மக்களை
நம்புகிறவர்கள் தோற்கமாட்டார்கள் என்று அவர் பேசினார்.

பிரச்சாரத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சமயபுரம் சின்னையன்,
சிறுபான்மை பிரிவு புல்லட் ஜான், முன்னாள் அமைச்சர் டிபி.பூனாட்சி, அம்மா பேரவை
மாவட்ட செயலாளர் ரமேஷ், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், ஒன்றிய
செயலாளர்கள் ஜெயக்குமார், அதாளி,ஜெயராமன் மற்றும் கூட்டணி கட்சி
நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.