திமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மீது மாவட்ட நிர்வாகமும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பார்களா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் கூட்டணிக் கட்சியை சேர்ந்த சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவன தலைவர் இனிகோ இருதயராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
திருச்சி மாநகரில் பல கிறிஸ்தவ தலைவர்கள், கிறிஸ்தவ நல விரும்பிகள் பலர் இருந்த போதிலும் சென்னையில் உள்ள இவரை திருச்சியில் போட்டியிட மு க ஸ்டாலின் அறிவித்தது ஏன் என்று திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கிறிஸ்தவர்களே புலம்பி வரும் நிலையில்
இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் உள்ள கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கமலக்கண்ணன் அவர்களிடம் உறுதிமொழி பத்திரம் வாசித்து மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக இவர் பாலக்கரையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக கிளம்பி வர திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் இருந்து கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க உறுப்பினர்கள் அனைவரும் வேன்கள் மற்றும் லாரிகள் மூலமாக அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் பெரியவர்களுக்கு தலைக் இ ரூ.200 ம் சிறுவர் சிறுமிகளுக்கு ரூ.100 ம் வழங்குவதாக கூறி அழைத்து வரப்பட்டு இருந்தனர்.
10% நபர்களே முக கவசம் அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர்கள் அடையாள அட்டை இருந்தும் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறிய திருச்சி காவல்துறை துணை ஆணையர் எந்த பத்திரிக்கையிலும் பணி புரியாமல் கேமரா மட்டுமே கையில் வைத்திருந்த இனிகோ இருதயராஜ் ஆஸ்தான புகைப்பட கலைஞர்களும் உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். உண்மையான நிருபர்களிடம் சோதனை செய்த துணை ஆணையர் போலி புகைப்பட கலைஞர்கள் பற்றி தகவல் கூறியும் போலி புகைப்பட கலைஞர்கள் மீது சோதனை செய்யாதது ஏன் என தெரியவில்லை.
அனைத்து மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட கிறிஸ்தவ பொதுமக்களுக்கும் பல லட்சங்கள் செலவு செய்த இனிகோ இருதயராஜ் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள நலிவடைந்த கிறிஸ்தவர் பொது மக்களை கண்டு கொள்ளாதது ஏன் ?
இவர் இப்போதே இப்படி செயல்பட்டால், வெற்றி பெற்ற பிறகு நலிவடைந்த கிறிஸ்தவர்களையும் மற்ற மதத்தினரையும் எப்படி நடத்துவார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம் என பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.
கொரோனா இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தலாமா என அரசு உயர்அதிகாரிகள் ஆலோசித்து வரும் நிலையில் இது போன்ற அரசியல்வாதிகள் முக கவசம் கூட கொடுக்காமல் ஏழை பொதுமக்களை இப்படி சமூக இடைவெளி இல்லாமல் அழைத்து வருவது எந்த வகையில் நியாயம் ?
மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்பது நடுநிலை பொதுமக்களின் எதிர்பார்ப்பு.