Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜன் மனு தாக்கல் செய்தார்.

0

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

அஇஅதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில்,

வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அஇஅதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவரம்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, மணப்பாறை உள்ளிட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில், லால்குடி சட்டமன்ற தொகுதி தவிர்த்து மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர்.

திருச்சி மாநகரில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக திருச்சி எடத்தெரு அண்ணா சிலையில் இருந்து அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்த அவர்,

அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கமலகண்ணனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்பதால்,

அதிமுக கிழக்கு சட்டமன்ற வேட்பாளர், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுடன், தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் நந்தா.செந்தில்வேல், பாரதீய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.