சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஓய்வுபெற்ற வீரர்களை உள்ளடக்கிய லெஜண்ட் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்றுள்ளது.
ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணியும் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியும் மோதின.
இந்தப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 204- ரன்கள் குவித்தது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான 47 வயதான சச்சின் 37- பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.
22 பந்துகளில் 52 ரன்கள் அடித்த யுவராஜ் சிங், ஒரே ஓவரில் 4 சிக்சர்களை பறக்கவிட்டார். ஓய்வுக்கு பிறகும் அசத்தலாக ஆடி ரசிகர்களை யுவரஜ் சிங் வியக்க வைத்தார்.
205-ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய தென் ஆப்பிரிக்க அணி 148- ரன்கள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.