நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9- ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், இந்த மாத துவக்கத்தில் சென்னை வந்த டோனி, தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். டோனி வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் டோனியின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் டோனி துறவி போன்ற காட்சி தருகிறார்.
டோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. டோனியின் இந்த புதிய தோற்றத்தை புரியாத புதிருடன் அவரது ரசிகர்கள் வியப்போடு பகிர்ந்து வருகின்றனர்.