Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஜெய் சிவசேனா மற்றும் பரிவார் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

0

ஜெய்சிவசேனா மற்றும் பரிவார் இயக்களின் மாநில, கோட்ட , மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்,

ஜெய்சிவசேனா மற்றும் பரிவார் இயக்கங்களான பாரதிய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு பாரதிய யுவசேனா, பாரதிய மகளிர் சேனா, பாரதிய ரியல் எஸ்டேட் & பில்டர் சங்க மாநில கோட்ட, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சங்கீதா ஹோட்டல் மண்டபத்தில் ஜெய்சிவசேனா மாநில பொதுச் செயலாளர் எம்.பி.மணிமாறன் தலைமையிலும் பாரதிய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் பி.முருகேசன், பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் திருச்சி V.நடராஜன் பாரதிய யுவசேனா மாநிலத் தலைவர் எம்.கருணாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக ஜெய்சிவசேனா & பரிவார் இயக்கங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமாரராஜா கலந்துக்கொண்டு வளர்ச்சி பணி, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார். வரும் ஏப்ரல் 6-ந் தேதி, நடைப்பெற உள்ள தமிழக சட்டமன்றத்தேர்தலில்

ஜெய்சிவசேனா சார்பாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் மட்டும் வேட்பாளர் நிறுத்துவது என்றும், மற்ற 233 சட்டமன்ற தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க.கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகரம் ஒரு தொழில் நிறைந்த மாவட்டமாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கத்திலும் கிருஸ்தவ மிஷனரிகளின் பொய் பிரச்சாரத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மூடப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை உடனே திறந்திடவும் அங்கு பணி செய்து வந்த ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், உட்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மீண்டும் வேலை கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தை தேர்தல் பிரச்சாரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது

கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அமுல்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடான 30 சதவீகித இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கு என உள் இட ஒதுக்கீடாக 3 சதவீதமான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்திட வேண்டும் என்றும் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட தலைவராக Er. ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்,

ஜெய்சிவசேனா திருச்சி கோட்டத்தலைவராக எம்.சக்திவேல் அவர்களும், பாரதீய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளராக B.மணிமாறன் அவர்களையும், பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு, மாநில செயலாளராக மதியழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மேலும், மாநில கோட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் இறுதியில் மாநில அமைப்பு செயலாளர் பிருங்கி ராமசுப்பிரமணி நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.