Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்.ஐ.டி.யில் கல்லூரியின் நிறுவன நாள் விழா

0

'- Advertisement -

திருச்சி என்.ஐ.டி
கல்லூரியின் நிறுவன நாள் விழா கல்லூரி அரங்கில் நடந்தது.

முன்னாள் மாணவர் கவுன்சில் தலைவர் ஸ்நேகித் கல்லா வரவேற்றார். கல்லூரி டீன் டாக்டர் ராமகல்யாண் அய்யஹரி மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டார்.

கொரோனா பேரிடர்
காலத்தில் எதிர்கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார் .

கல்லூரி இயக்குனர் மினி ஷாஜி தோமஸ் பேசும்போது,

இந்த கல்வி ஆண்டில் பல்கலை கழக அளவில் வினாடி வினா போட்டிகளில் எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவில் 9-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு திருச்சி என் ஐ.டி. முன்னேறி இருப்பதாகவும், நம்பர் ஒன் இடத் தை பிடிப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் பிரத்யேக கண்டுபிடிப்பு மையம் திருச்சி என்.ஐ.டி.யில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தேர்வு செய்துள்ள 25 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களில் என்.ஐ.டி.யும் இடம் பெற்று உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Suresh

தலைவர் பாஸ்கர்பட் பேசும்போது திருச்சி என்.ஐ.டி கல்லூரி தொழில்நுட்ப கல்வியில் முன்னோடியாக இருக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் சவால்களை நாம்
எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

மத்திய வெளி விவகார அமைச்சக செயலர் விகாஸ் ஸ்வரப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கூறியதாவது அவர் கூறியதாவது:-

புதியன கண்டுபிடிப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். இதற்கு தலைமை ஏற்கும் ஆய்வு குழுவின் தலைவருக்கு படைப்பாற்றல் ஆர்வம், பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன், பங்களிப்பு ஆகிய 4-ம் அவசியம் இருக்க வேண்டும்.

குழுவினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதை நான் ஏற்கனவே தற்செயல் பயிற்சி என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறேன். இவை இருந்தால் மட்டுமே தொய்வின்றி ஆய்வுக் குழுவினரை வழிநடத்த முடியும்.

நாம் கண்டுபிடிப்பில் புதிய சகாப்தம் படைக்க வேண்டும்.

திருச்சி என்.ஐ.டி கல்லூரிக்கு நிறைய சமூக சேவைகள் செய்த அனுபவம் உள்ளது. இது பாராட்ட தக்கது. குறைந்த செலவில் தெரு தூசி உறிஞ்சி, விவசா யிகளுக்கான சோலார் குளிர்பதன கிடங்கு கண்டுபிடிப்புகள் பாராட்ட தக்கவை.

பெண்களை தொழில்முனைவோராக்கும் பயிற்சி முகாம்கள், கிராமப்புற மாணவர்களுக்கு ஜே.இ.இ. நுழைவுதேர்வு பயிற்சி அளித்த என்.ஐ.டி. மாணவர்களை பாராட்டுகிறேன் என்றார். முடிவில் மாணவர் கமலேஷ் கண்ணா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.