திருச்சியில் பார்வையற்ற
எங்களுக்கு பேருந்துகளில்
நடத்துனர்கள்
உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் –
பார்வையற்ற மெல்லிசை கலைஞர்கள் பரிதாப கோரிக்கை :
பார்வையற்றோர் மெல்லிசை கலைஞர்கள் நல சங்கம் சார்பில் தலைவர் முருகன் மற்றும் துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் பொதுச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில்…
தற்போது தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பார்வையற்ற இசைக்
குழுக்கள் உள்ளன.
அரசு பார்வையற்ற இசைக் கலைஞர்கள் எங்களுக்கு நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், நல வாரியத்தில்
பார்வையற்ற இசைக்கலைஞர்களை முக்கிய பிரதிநிதியாக வைக்கவேண்டும்.
வயது வரம்பின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பார்வையற்ற இசைக்கலைஞர்கள் கொண்டு செல்கின்ற இசைக் கருவிகளுக்கு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசுப் பேருந்துகள் மற்றும் இடைநில்லா பேருந்துகளிலும் அரசு பேருந்துகளில் வழங்கப்படுகின்ற
25சதவீத கட்டணத்தையே பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும்
பார்வையற்ற
எங்களுக்கு பேருந்துகளில்
நடத்துனர்கள்
உரிய மதிப்பு கொடுக்க வேண்டும்.
60வயதிற்கு மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் இயல் இசை நாடக மன்ற உதவித்தொகை வழங்க வேண்டும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 22ம்தேதி தமிழகத்தில் அனைத்து பார்வையற்றோர் இசைக்குழுவினரை ஒன்றிணைத்து நிதி திரட்டி இசைப் போட்டி நடத்த உள்ளதாக
தெரிவித்தனர்.