Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சத்தீஸ்கர் காவல்துறையில் 13 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக நியமனம்.

0

'- Advertisement -

சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர்.

2019-2020 ஆம் ஆண்டிற்கான கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளி வந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் காவல்துறையினர், மாநிலத்தின் 4 மாவட்டங்களில் 13 திருநங்கைகளை கான்ஸ்டபிளாக நியமித்துள்ளனர்.

Suresh

இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டி.எம் அவஸ்தி அவர்கள் கூறுகையில், கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வுக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். திருநங்கைகளை நாங்கள் முதன்முறையாக கான்ஸ்டபிளாக நியமித்துள்ளோம்.
அவர்களை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தெரிவுசெய்யப்பட்ட திருநங்கைகளில் ஒருவர் கூறுகையில், ‘நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை வெளிபடுத்த எனக்கு வார்த்தை இல்லை. நானும் எனது சக ஊழியர்களும் இந்த தேர்வுக்கு மிகவும் கடினமாக உழைத்தோம். இது எங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்குமுன் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தலா ஒரு திருநங்கை காவலராக தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.