Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் கண்ணீருடன் இளம்பெண்

0

 

https://profile.dailyhunt.in/anand451757395241110

மற்றொரு பெண்ணுடன் திருமணம்,
எனது கணவரை மீட்டுத்தாருங்கள் குழந்தையுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த காதல் மனைவி கண்ணீர்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வழக்கமாக நடைபெறும் நேரம் என்பதால் இன்று தன்னுடைய குழந்தையுடன் பெண் ஒருவர் கண்களில் கண்ணீர் சிந்தும் வண்ணமாக தன்னுடைய கணவரை மீட்டுத்தாருங்கள் என்று அதிகாரிகளிடம் முறையிட்டு கலெக்டர் அலுவலக வாசலில் கவலையுடன் அமர்ந்திருந்தார்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மனு நேரில் வாங்க பட மாட்டாது ..

அப்போது அவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில்;-எனது பெயர் சத்யா வயது 32 எனது ஊர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியாகும். எனது கணவர் பெயர் ராஜேஷ் குமார் வயது 35.

நாங்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டோம்.அதைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தாருடன் சேராமல் தனியாக வசித்து வந்தோம்.

இந்த நிலையில் எங்களுக்கு பத்து வயதில் லீனதா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது.

என்னுடைய கணவர் ராஜேஷ் குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் அடிக்கடி தஞ்சாவூர் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவார் நானும் வேலைக்காக தானே செல்கிறார் என்று கவனிக்காமல் இருந்தேன். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அவர் அவரின் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நானும் அவரிடம் கேட்டேன், அப்போது அவர் நான் திருமணம் செய்யவில்லை என்று மறுத்து வந்தார் .

பின்னர் நான் குடியிருக்கும் வீட்டின் அருகே அவரும் அந்தப் பெண்ணும் வசித்து வருவதை கேள்விப்பட்டேன் அங்கே சென்று நேரடியாகப் பார்த்தேன் அப்போது தான் எனக்கு முழு விவரமும் தெரிந்தது இதை அறிந்த நான் பின்னர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.போலீசார் என்னை சமாதானம் செய்து அனுப்பி விட்டார்கள் ஜியபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தேன் அங்கேயும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த நான் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு என்னுடைய பிரச்சினைகளை மனுவாக எழுதி வந்திருக்கிறேன். இங்கேயாவது எனக்கு நீதி கிடைக்குமா என்று கண்களில் கண்ணீர் சிந்தியபடி இந்த வாசலிலே அமர்ந்திருக்கிறேன்.

மேலும் எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி ஜாதிப் பிரச்சனை இருந்து வந்தது. அதைத்தொடர்ந்து என் குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் என் மகளின் எதிர்காலம் கருதியும் என் கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.