
எம் கே தியாகராஜபாகவதருக்கு 20 லட்சம் மதிப்பில் நினைவு மண்டபம்.
திரையுலக முதல் சூப்பர்ஸ்டார் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதரின் 112-ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சங்கிலியாண்டபுரம் மணல்வாரி ரோட்டில் விஸ்வகர்மா ருத்ரபூமி பகுதியில் உள்ள அவரது சமாதிக்கு
திருச்சி எடத்தெரு விஸ்வகர்மா மகாஜன சபையின் மாநில தலைவர் குமரப்பன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்பு மாநில தலைவர் குமரப்பன் கூறுகையில்:
தமிழ் திரைப்படத்துறையில் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவாக திருச்சியில் உள்ள அவரது சமாதியில் நினைவு மண்டபம் கட்ட அரசிடம் பலமுறை மனு அளித்தும், கோரிக்கை வைத்தும் எவ்வித பலனும் இல்லை .
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து விஸ்வகர்மா மகாஜன சபையின் சார்பில் நிதி திரட்டி சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்ட முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் விஸ்வகர்மா பொருளாளர் வெள்ளையன், துணைத் தலைவர் பாலசுப்ரமணி செயலாளர்கள் சுப்பண்ணா, கோபால், கந்தசாமி, மருதமுத்து மற்றும் சங்க சட்ட ஆலோசகர் சந்திரசேகர், மற்றும் தியாகராஜ பாகவதரின் ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.