திருச்சியில்
குப்பைகளை அல்ல ஆள் இல்லை. வில்லியம்ஸ் ரோட்டின் அவலநிலை!
திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் போஸ்ட் ஆபீஸ் எதிர்புறம் துர்நாற்றத்துடன் குப்பைகள் குவிந்த வண்ணம் அப்புறப்படுத்துவதற்கு ஆளில்லாமல் கிடப்பில் உள்ளது.
அவ்வழியே செல்லும் பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில் ,
இப்பகுதியில் இருப்பவர்களுக்கும் சாலையில் வந்து செல்லும் பயணிகளுக்கும் தொற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,
அத்துடன் அதனை நாய், மாடு போன்ற விலங்குகள் மேய்ந்து கொண்டு சாலையில் வரும் இரு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் குறுக்கே விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது,
அத்துடன் இவ்வாறு சேரும் குப்பைகளை 6 மாதம் முதல் 12 மாதம் வரை அள்ள படாமல் மிகுந்த அலட்சியப் போக்கை காட்டுகிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.
எனவே இப்பகுதியில் சேரும் குப்பைகளை சேரவிடாமல் உடனடியாக முற்றிலும் அகற்ற வேண்டும் ,
அத்துடன் இப்பகுதியில் இனி குப்பைகள் சேராதவாறு பொதுமக்களுக்கு விளம்பர பலகையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.