திருச்சியில் நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலக் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஒட்டலில்
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில கூட்டம்
மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊதியம் காலக்கெடு முடிந்த பின் 8. 11.2020 முதல் 22.2.2021 முடிய இடைப்பட்ட 82 நாட்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
புதிய ஊதியம் நிர்ணயம் செய்யும் பட்சத்தில் ஒரு ஊதிய உயர்வு அளித்து வழங்கப்பட வேண்டும்.
குழுவின் பரிந்துரையை 10 சதவிகித உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
வீட்டு வாடகைப்படி உச்சவரம்பு தளர்த்தப்பட வேண்டும்,
நகர ஈட்டுப்படி க்கும் உச்சவரம்பு தளர்த்த வேண்டும், கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப கடைப்பிடி வழங்குவதை தவிர்த்து ஒரே சீராக வழங்கப்பட வேண்டும்,
விற்பனையாளர் அளவையாளர் என்ற நிலையில் நகர்வு பணி காய்கறி அங்காடி அம்மா மருந்தகம் பெட்ரோல் பங்க் சூப்பர் மார்க்கெட் அனைவருக்கும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனை விற்பனையாளர் அளவையாளர் களுக்கு வழங்கப்படும் சலுகைகள் படிகள் ஒரே சீராக வழங்கப்பட வேண்டும்,
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஊதியத்தினை அரசே நேரடியாக வங்கி கணக்கில் வழங்கப்பட வேண்டும்,
ஏற்கனவே அமைக்கப்பட்ட சக்தி சரவணன் தலைமையிலான குழு பரிந்துரைகள் ஆன 17, 18,19.20 உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்,
ஊதிய உயர்வு அரசாணை தமிழகம் முழுவதும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும் முழுமையாக நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அரசாணையில் குறிப்பிட்டவாறு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அந்தந்த மாவட்ட இணைப்பதிவாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை மாநில பதிவாளர் உறுதி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள். நிறைவேறப்பட்டன..
கூட்டத்தில் தினேஷ்குமார் .மாநில பொதுச்செயலாளர், நாகராஜ்,மாநில பொருளாளர், மாவட்ட பொருளாளர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…