*சென்னை வடபழனி ஜே.பி.டவரில் இயங்கும் தமிழ் சினிமா கம்பெனி வளாகத்தில்*
*சினிமாவின் தற்போதைய நிலை*
*பல வருடங்கள் சினிமாவில் பணி புரிந்தவர்களின் அனுபவங்கள்*
*சிறிய பட்ஜெட் படங்களின் வியாபார வாய்ப்பு*
*நல்ல படம் எடுக்க என்ன செய்யலாம்*
*என்று பலவிதமான தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது*
*கூட்டத்தில் திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் நபர்கள் 92 பேர் கலந்து கொண்டனர்*
அரசியல், மதம், தனி மனிதத் தாக்குதல் மற்றும் தனிநபர் புகழ்ச்சி, எந்தச் சங்கத்தைப் பற்றியும் விமரிசனம் ஆகியவை கூடாது என்ற நிபந்தனையுடன்
தமிழ் சினிமா கம்பெனியின் (TCC) நிறுவனர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான M.கஸாலியின் அறிமுக உரையுடன் கூட்டம் தொடங்கியது
*கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் கூட்டத்தின் முன்பாக வந்து தங்களைப் பற்றியும், தாங்கள் ஈடுபட்ட மற்றும் ஈடுபட விரும்பும் துறைகள் பற்றியும் சுருக்கமான சுய அறிமுகம் செய்தனர்*
*திரைப்பட இயக்குனர் ஆச்சார்யா’ ரவி தன்னுடைய சினிமா பயணம் பற்றியும், இயக்குநர் பாலாவுடன் தன்* *அனுபவங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார்*
*பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் சளைக்காமல் பதில் அளித்தார்*
*தயாரிப்பாளரும் நடிகருமான டாக்டர் தினேஷ் பாபுவின் சினிமா அனுபவங்கள் சுவையாக வெளிப்படுத்தினார்*
*ஹரிஹரன் தன் 42 வருட அனுபவங்களை 15 நிமிடத்தில் அழகாக விவரித்தார். அந்த 15 நிமிங்களில் 13 நிமிடங்கள் கூட்டம் ஆரவாரத்துடன் சிரித்துக் கொண்டிருந்தது*
*அவர் எடுக்கப் போகும் படத்தின் கதையைப் போகிற போக்கில் வீசினார்* *தயாரிப்பாளர் பேய், இயக்குநர் பேய், ஹீரோ ஹீரோயின்கள் பேய்…’ என ரியல் பேய்ப்படத்தின் கருவை விவரித்தார்*
*பாடல் ஆசரியரும் இயக்குனருமான முருகன் மந்திரம் தன் சினிமா பயணத்தின் ஏற்ற இறக்கங்களை சுவைபடக் கூறினார்*
*ஐஸ்வர்யா என்ற உதவி இயக்குநரின் கேள்வி அவரைத் திணறடித்தது அந்த கேள்விக்கான பதிலையும் பகிர்ந்து கொண்டார்*
*எட்டாம் வகுப்பு படிக்கும் பையனும், அதே வயது சிறுமியும் தங்கள் போல்டான பேச்சால் அசத்தினார்கள்*
*கதாசிரியரரும் இயக்குனருமான உதயம் தன் நீண்ட நெடிய சினிமா அனுபவங்களையும், 60 கதைகளுக்கு மேல் பவுண்டட் ஸ்கிரிப்ட் வைத்திருப்பது பற்றியும், சின்னத்திரை மற்றும் தெலுங்குத் திரை அனுபவங்களையும் எதார்த்தமாக எடுத்துக் கூறினார்*
*அவரது கதை பற்றிய அட்வைஸ் வந்திருந்தவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது*
*திருச்சியிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலரும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தன் திரைத்துறைப் பயணத்தை அழகாக விவரித்தார்*
*மற்றவர்களிடம் அதிகமாகக் கேள்விகளும் கேட்டு எல்லோருக்குமான விளக்கங்களை வாங்கி சந்தேகத்தைப் போக்கினார்*
*TCC ன் நிர்வாக இயக்குனரும் திரைப்பட இயக்குனரருமான தன்வீர் தன் பங்கிற்கு கிரிட்டிக்கலான சினிமா கேள்விகள் கேட்டு எல்லோரையும் யோசிக்க வைத்தார் அதோடு அதற்கான தீர்வுகளை விளக்கி கூறினார்*
*தமிழ் சினிமா கம்பெனி என்பது சிறிய படங்களுக்கான வியாபார மையமாக இருக்கும் என்றும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும், எல்லா சங்கங்களையும் நட்பு ரீதியிலும் வியாபார ரீதியிலும் அணுகும் என்றும் TCC தமிழ் சினிமா கம்பெனியின் நிறுவனரும் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸாலி தெளிவு படுத்தினார்*.
*மதியம் சிறப்பான அசைவ உணவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது*
*இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள யாரிடமிருந்தும் எந்தப் பணமும் பெற்றுக் கொள்ளவில்லை. முடிந்தவரை இனிமேலும் இலவசமாகவே நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று தமிழ் சினிமா கம்பெனியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்*
*கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டு, தங்கள் ப்ராஜெக்ட் பற்றித் தனிப்பட்ட முறையில் பேசி புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு, மனமும் வயிறும் நிறைய மகிழ்ச்சியாகக் கிளம்பினார்கள்*
*அடுத்த கூட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்*