Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

1.5 கோடி அதிமுக தொண்டர்களும் சின்னம்மா பின்னால் உள்ளனர். திருச்சியில் அதிமுக நிர்வாகி பேட்டி.

0

சசிகலாவுக்கு ஆதரவாக மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவின் வருகைக்கு ஆதரவாக ஸ்ரீரங்கம் பகுதியில் அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகம் ஆதரவு போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் மீண்டும் சசிகலாவுக்கு ஆதரவாக திருவரம்பூர் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அன்பு சகோதரி தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் கழகம் காத்திட பொதுச் செயலாளர் பணியை தொடர்ந்திட வருக வருக என வணங்கி வரவேற்கிறேன்.தியாகத் தலைவி சின்னம்மா வின் உண்மை விசுவாசி அரசங்குடி சுவாமிநாதன் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் திருவெறும்பூர்.

என வாசகம் அடங்கிய போஸ்டர்கள் திருவரம்பூர் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்.

அதிமுக கட்சி தற்போது இரண்டாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் கழகத்தை ஒருங்கிணைத்து வழி நடத்த அதிமுக பொதுச்செயலாளர் பணியை தியாகத் தலைவி சின்னம்மா மட்டுமே வழிநடத்த முடியும். அதிமுகவின் உண்மை தொண்டர்கள் ஒன்றரை கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் சின்னம்மாவின் வருகைக்காக எதிர்நோக்கி காத்துள்ளனர். அதனால்தான் நான் புரட்சித்தலைவி அம்மா விற்கு பிறகு பொதுச்செயலாளர் பணியைத் தொடர சின்னம்மா வரவேண்டும் என ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருந்தேன். இதற்காக என் மீது நடவடிக்கை எடுக்க கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் இல்லை. தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுகவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் சின்னம்மாவின் பின்னால் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.