Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய ராசிப்பலன் – 27.01.2021

0

இன்றைய ராசிப்பலன் – 27.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் இருக்கும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வர இருக்கும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் நீங்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை கொடுக்கும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பொறுப்புடன் நடந்துக்கொள்வதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்க முடியும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்ல பலனைக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறைந்து நிம்மதி தரும். உறவினர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். செலவுகள் குறைந்து சேமிக்க கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிடைக்கும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் தீரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கும். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை கொடுக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் அமையும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தாராள தன வரவால் கடன்கள் குறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

மீனம்

உங்களின் ராசிக்கு இன்று உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் இருக்கும். வண்டி வானகங்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் எளிதில் வரும்.

Leave A Reply

Your email address will not be published.