திருச்சியில் காந்தி மார்க்கெட் கிழங்கு மாங்காய் சங்கம் சார்பாக குடியரசு தின விழா, சங்க வெள்ளி விழா உள்பட முப்பெரும் விழா சங்கப் பொருளாளர் காதர் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு தேசியக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் சங்க அவைத்தலைவர் கருப்பையா சங்கத் தலைவர் கே .டி தங்கராஜ் மற்றும் கமலக்கண்ணன், சீனிவாசன், முகமது அனிபா , ஜமால் முகமது, சுதாகர்,நாராயணன் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தொழிலாளர்கள் விவசாயிகள் அனைத்து சங்க உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்