திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் இறைச்சி கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளில் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சந்தை அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு வதைக் கூடத்தில், அங்கு பணிபுரியும் கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்த பின்னர் அறுத்து சீல் செய்த பின்பு தான் ஆட்டிறைச்சியை விற்பனை செய்ய வேண்டும்.
அவ்வாறில்லாமல் விற்பனை செய்யப்படும் ஆட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.