பாஜக மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி. முரளிதரன் ஏற்பாட்டில், மாற்றுக் கட்சியிலிருந்து 400 பேர் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
மாநில வர்த்தக பிரிவு சார்பாக மாநில வர்த்தக பிரிவு செயலாளர்எம்.பி. முரளிதரன் ஏற்பாட்டில், சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் எம்பி மகாராஜா மஹாலில், மண்ணச்சநல்லூர், துறையூர் பகுதியை சார்ந்த மாற்றுக் கட்சியினர் , இளைஞர்கள், வ.உ.சி.பேரவை புறநகர் மாவட்ட தலைவர் பாலாஜி பிள்ளை தலைமையில், துணைத் தலைவர் கார்த்திக், தமிழ்நாடு முத்தரையர் சங்க துறையூர் தொகுதி பொறுப்பாளர் மாஸ் மகேந்திரன் தலைமையில் 400 பேர் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம. சீனிவாசன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
பின்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் புற நகர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் தங்க.ராஜைய்யன், மாநில செயலாளர் பார்வதி நடராஜன். கோட்டப் பொறுப்பாளர் பெரியசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் சுசீலா குமார், மாநகர பொதுச் செயலாளர் காளீஸ்வரன், வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் ராம்குமார், அரியலூர் மாவட்ட வர்த்த்தகர் பிரிவு தலைவர் சுரேஷ் வேல், புறநகர் மாவட்ட நிர்வாகி சீனிவாசன், வரதராஜன், வெங்கடேசன், ராஜ்குமார், செந்தில்குமார், செல்வராஜ், மலைக்கோட்டை மண்டல் வர்த்தக பிரிவு செயலாளர் பிச்சை, நூர் முகம்மது, விவசாய அணி மாவட்டத் தலைவர் மணவை சுப்பிரமணி, உப்பலியபுரம் ஒன்றிய தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.